விவசாயிகளுக்கான முதல் குளிர்சாதன சரக்கு ரயில் சேவை : தேவ்லாலி 🔄 தனபூர் இடையே ஆகஸ்ட் 7ம் தேதி துவக்கம்

விரைவில் கெட்டுப் போகக்கூடிய பொருட்களை கொண்டு செல்வதற்கான ஒரு cold supply chain  உருவாக்கும் முயற்சியாக, தனியாருடன் இணைந்து,  கிசான்  ரயில் சேவை வழங்கப்படும் என இந்த ஆண்டு தொடக்கத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது நிதிநிலை உரையில் அறிவித்தார்.

அதன் அடிப்படையில்,  ரயில்வே அமைச்சகம்  விவசாயிகளுக்கான முதல் ஏசி சரக்கு ரயிலை தேவ்லாலியில்(மஹாராஷ்டிரா) இருந்து தனபூர்(பீகார்) வரை இயக்க உள்ளது.  ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலை 11 மணிக்கு  முதல் ரயில் சேவை தொடங்கும் என்று ரயில்வே அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கிசான் ரயில், இடையில் நாசிக் சாலை, மன்மத், ஜல்கான், பூசாவல், புர்ஹான்பூர், காண்ட்வா, இடர்சி, ஜபல்பூர், சட்னா, கட்னி, மணிக்பூர், பிரயாகராஜ் சியோகி, பண்டிட்  தீன் தயாள் உபாதயாய நகர் மற்றும் பக்ஸரில் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

📌 மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் முதல் ஏசி சரக்கு ரயிலை காணொளி காட்சி மூலம் கொடியசைத்து துவக்கி வைப்பார்.

📌 நவீன வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சரக்கு ரயில் பெட்டிகள் 17 டன் கொள்ளளவு கொண்டவை.

📌 இந்திய ரயில்வேயில் தற்போது 9 குளிரூட்டப்பட்ட சரக்கு ரயில் பெட்டிகள் உள்ளன. 

கட்டணம் - சாதாரண் சரக்கு ரயிலை விட 1.5 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த திட்டம் நாடு முழுவதும் விரைவில் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்டா மாவட்டங்களில் இருந்து, வாழைத்தார்கள், வாழையிலை, காய்கறிகள், பூக்கள் உள்ளிட்டவை வெளி மாவட்டங்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் ஏராளமான பழங்கள், காய்கறிகள், பூக்கள் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு லாரிகளில் எடுத்து செல்லப்படுகின்றன. இதற்கு மாற்றாக, தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கான பிரத்யேக ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும். சென்னை-கன்னியாகுமரி வரையிலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய தென்னியந்திய மாநிலங்களும் விவசாயி இயக்கப்பட வேண்டும். இதனால் விவசாயிகள் பயன் அடைவதோடு மட்டுமல்லாமல், ரயில்வே துறைக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் கிடைக்கும்.