சென்னை 🔄 பெங்களூர் 🔄 மைசூர் இடையேயான புல்லட் ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் துவக்கம்

இந்தியாவில் டெல்லி 🔄 வாரணாசி, வாரணாசி 🔄 ஹவுரா, டெல்லி 🔄 அகமதாபாத், மும்பை 🔄 நாக்பூர், மும்பை 🔄 ஹைதராபாத், சென்னை 🔄 மைசூர் மற்றும் டெல்லி -🔄 அமிர்தசரஸ் ஆகிய 7 மார்க்கங்களில் புல்லட் ரயில் சேவையை அறிமுகம் செய்வது குறித்து ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வந்தது.

இது குறித்து ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் கூறுகையில் அகமதாபாத் 🚆 மும்பை அதிவேக ரயில் வழித்தடத்தின் ஒரு பகுதிக்கு, நிலம் கையகப்படுத்தல் 90% முடிந்ததும், மூன்று மாதங்களுக்குள் டெண்டர் பணிகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 7 வழித்தடங்களிலும் சாத்தியக்கூறு ஆய்வு தொடங்கியுள்ளதால், ஒரே ஆண்டில் இதை நிறைவேற்றுவோம். அதாவது அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் திட்ட வரைவு தயாரிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து எந்த மார்க்கங்களில், 350 கி.மீ வரையிலான வேகத்தில் இயக்கலாம் எந்த மார்க்கத்தில், 250 கி.மீ வேகத்தில் இயக்கலாம் என்பது குறித்து அறிக்கையில் தெரியவரும்.

தற்போது சென்னை மற்றும் மைசூர் இடையே சதாப்தி ரயில் 7 மணி நேரத்தில் கடக்கிறது. பிற ரயில்கள் இந்த தூரத்தை கடப்பதற்கு குறைந்தபட்சம் 10 மணி நேரம் பிடிக்கிறது.

அதே சமயம் சென்னை மற்றும் பெங்களூர் இடையே சதாப்தி ரயில் 5 மணி நேரத்தில் கடக்கிறது. பெங்களூர் மெயில் 6 மணி நேரத்திலும், பிற எக்ஸ்பிரஸ் ரயில்கள் சுமார் 7 மணி நேரத்திலும் இந்த தூரத்தை கடக்கின்றன.

புல்லட் ரயிலின் அதிகபட்ச வேகம் 320 கிலோ மீட்டர் ஆகும். எனவே வேகமாக மக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு விரைவாக பயணிக்க முடியும்.

புல்லட் ரயில் மூலம் சென்னை மற்றும் மைசூர் ஆகிய இரு நகரங்களையும் இரண்டு மணி நேரம் 25 நிமிடங்களில் கடந்துவிட முடியும். மேலும் சென்னையில் இருந்து பெங்களூருக்கு 1 மணி நேரம் 45 நிமிடங்களில் பயணிக்க முடியும்.


கருத்துரையிடுக

புதியது பழையவை