44 'வந்தே பாரத்' விரைவு ரயில் பெட்டிகள் தயாரிப்புக்கான தயாரிப்பு ஒப்பந்தம் ரத்து : இந்தியன் ரயில்வே அதிரடி

சென்னையை சேர்ந்த, ஐ.சி.எப்., எனப்படும், ரயில் பெட்டி தொழிற்சாலை சார்பில், கடந்த ஜூலை மாதம் 44 'வந்தே பாரத்' ரயில்கள் தயாரிக்க, 'டெண்டர்' கோரப்பட்டது.

மொத்தம், ஆறு நிறுவனங்கள், டெண்டரில் போட்டியிட்டன. இதில் ஹரியானாவின் குர்கானை சேர்ந்த, 'சி.ஆர்.ஆர்.சி., பயனீர் எலெக்ட்ரிக்' என்ற நிறுவனத்துக்கு, ஒப்பந்தம் தரப்பட்டது.

இந்நிலையில் இந்த நிறுவனம், 2015 முதல், சீன நிறுவனத்துடன் தொழில் ஒப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்து, அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டெண்டரை, ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தது.

இந்திய ரயில்வே அமைச்சகம் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "44 வந்தே பாரத் விரைவு ரயில்களுக்கான ரயில்பெட்டிகளை தயாரிக்க விடுக்கப்பட்டிருந்த சர்வதேச டெண்டர் ரத்து செய்யப்படுகிறது. மேக் இன் இந்தியாவுக்கு முன்னுரிமை அளித்து திருத்தப்பட்ட பொதுகொள்முதல் விதிகளின்படி அடுத்த ஒரு வாரத்திற்குள் புதிய டெண்டர் விடுக்கப்படும்" என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.