பிற மாநிலங்களின் ரயில்கள் வந்து செல்ல எதுவாக சென்னை கடற்கரை - சென்னை எழும்பூர் இடையே 4வது ரயில் பாதை அமைக்க பரிந்துரை

சென்னை எழும்பூா் ➡️ சென்னை கடற்கரை இடையே தற்போது மூன்று ரயில் பாதைகள் உள்ளன. இதில் இரண்டு பாதைகள் புறநகர் ரயில்களுக்கு ஒத்துக்கப்பட்டுள்ளது.

இதர ஒரு பாதையில் வெளி மாநிலங்களில் இருந்து வந்து செல்லும் ரயில்களும், சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

இதன் காரணமாக பல நேரங்களில் மற்ற மாநிலங்களின் ரயில்கள், சென்னை கடற்கரை மற்றும் எழும்பூா் வழியாக செல்ல போதிய ரயில் பாதை இல்லாததால், கூடுதல் நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகிறது. மேலும் கூடுதல் ரயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.

இந்நிலையில் சென்னை கடற்கரை-எழும்பூா் இடையே 4.3 கி.மீ. தூரத்தில் புதிய ரயில் பாதை திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து, போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.

இந்தப் புதிய பாதைக்கு மண் பரிசோதனைகள் முடிக்கப்பட்டு, சுமாா் ரூ.300 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. 

கூடுதல் பாதையை அமைப்பதன் மூலமாக, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை, கும்மிடிப்பூண்டி வழியாக விஜயவாடாவுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க முடியும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
புதியது பழையவை