மதுரை ரெயில்வே கோட்டத்தின் வருவாய் 3.49 சதவீதம் அதிகரிப்பு - கோட்ட மேலாளர் தகவல்

Image

மதுரையில் நடந்த சுதந்திர தின விழாவில் ரயில்வே கோட்ட மேலாளர் லெனின் பேசுகையில், மதுரை ரெயில்வே கோட்டம் ரூ.818.38 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகவும். இது முந்தைய ஆண்டை காட்டிலும் 3.49 சதவீதம் அதிகம் என்றும் கூறினார்.

மேலும் கடந்தாண்டு 1.76 மில்லியன் டன் சரக்கு கையாளப்பட்டது என்றும். 37.14 கி.மீ., ரயில் பாதை புதுப்பிக்கப்பட்டது என்றும். இந்தாண்டு 42.19 கி.மீ., புதுப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் பொது முடக்க காலத்தில் 174 சரக்கு ரயில்கள் மற்றும் 112 பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும். கடம்பூர் - கங்கைகொண்டான், வாஞ்சி மணியாச்சி - தட்டப்பாறை ரெயில் பாதைகள் இரட்டை பாதைகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும். பாம்பன் ரயில் பாலம் சென்னை ஐ.ஐ.டி., தொழில்நுட்ப உதவியுடன் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் மதுரை - துாத்துக்குடி 2வது அகல பாதை பணியின் ஒரு பகுதியாக மீளவிட்டான் - மேலமருதுார் இடையே ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.