சென்னை சென்ட்ரல் 🔄 எர்ணாகுளம் இடையே வாரத்தில் மூன்று நாட்கள் இயங்கி வரும் பார்சல் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிப்பு

அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்திற்காக இயக்கப்பட்டு வந்த சென்னை சென்ட்ரல் 🔄 எர்ணாகுளம் பார்சல் சிறப்பு ரயிலின் சேவை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு :

00653 சென்னை சென்ட்ரல் ➡️ எர்ணாகுளம் பார்சல் சிறப்பு ரயில்.
சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 8மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12:45க்கு எர்ணாகுளம் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, கருப்பூர், சேலம், ஈரோடு, உத்துக்குளி, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, திருச்சூர், அங்கமலி, அலுவா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

00654 எர்ணாகுளம் ➡️ சென்னை சென்ட்ரல் பார்சல் சிறப்பு ரயில்.
எர்ணாகுளத்தில் இருந்து திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 1:45க்கு புறப்பட்டு மாலை 6:30க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

இந்த ரயில் அலுவா, அங்கமலி, திருச்சூர், பாலக்காடு, கோயம்புத்தூர், திருப்பூர், உத்துக்குளி, ஈரோடு, சேலம், கருப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

The service of Train No.00653 Dr MGR Chennai Central – Ernakulam Tri- Weekly Parcel Cargo Express Special ( on SUNDAYS, TUESDAYS and THURSDAYS) has been extended till 31st August 2020.

The service of  Train No.00654 Ernakulam – Dr MGR Chennai Central Tri-Weekly Parcel Cargo Express Special ( on MONDAYS, WEDNESDAYS and FRIDAYS) has been extended till 31st August 2020.

கருத்துரையிடுக

புதியது பழையவை