தெற்கு ரெயில்வேயின் வருவாய் 2.3 சதவீதம் அதிகரிப்பு - பொது மேலாளர் தகவல்

தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை பெரம்பூர் ரெயில்வே மைதானத்தில் நேற்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தேசிய கொடியை ஏற்றிவைத்து ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் விழாவில் பேசுகையில், தெற்கு ரெயில்வே 2019-2020-ம் ஆண்டு ரூ.8,571.26 கோடி வருமானம் ஈட்டி உள்ளதாகவும். இதில் பயணிகள் ரயில்கள் மூலம் ரூ.4,587 கோடி வருமானம் கிடைத்துள்ளாகவும். இது கடந்த ஆண்டைவிட 2.3 சதவீதம் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் 2019 ஏப்ரல் மாதம் முதல் 2020 மார்ச் மாதம் வரை சரக்கு ரயில்கள் கையாண்டதன் மூலம் ரூ.2,755.38 கோடி தெற்கு ரெயில்வே வருமானம் ஈட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.


தெற்கு ரயில்வே அலுவலகங்கள் இணையவழி அலுவலகங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. 100 சதவீதம் இணையவழி செயல்பாட்டுக்காக இணைய வசதி கொடுக்கப்பட்டுள்ளது. பொது முடக்க காலத்தில் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவது உள்பட டிஜிட்டல்மயமாக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது