தனியார் ரயில் சேவை : 23 தனியார் நிறுவனங்கள் ஆர்வம்

நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் தனியார் ரயில் சேவைகளை தொடங்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

சுமார் 30 ஆயிரம் கோடி தனியார் மூதலீட்டில் மேற்கொள்ளப்படும் இந்த தனியார் ரயில் சேவைகளுக்கான ஏலம் இரண்டு பகுதிகளாக நடைபெறும் எனவும், மார்ச் 2023க்குள் தனியார் ரயில் சேவைகள் தொடங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் பவர், பஜாஜ் ஃபோர்ஜ் உள்ளிட்ட 23 தனியார் நிறுவனங்கள் ரயில்களை இயக்க விண்ணப்பித்துள்ளன.

முன்னதாக "இது ரயில்வேயை தனியார் மயமாக்கும் முயற்சியல்ல. வழக்கமான ரயில் சேவைகளுடன் கூடுதல் சேவையாகவே தனியார் ரயில்கள் இயக்கப்படும்" என அமைச்சர் பியூஷ் கோயல் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

புதியது பழையவை