தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 201 துணை மருத்துவ பணியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு : விண்ணப்பிக்க இன்று(ஆகஸ்ட் 14) கடைசி நாள்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: CMP Doctor - 36
சம்பளம்: மாதம் ரூ.75,000
வயதுவரம்பு: 53க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:  எம்.பி.பி.எஸ் முடித்து இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 

பணி: Nursing Staff - 32
சம்பளம்: மாதம் ரூ.44,900
வயதுவரம்பு: 20 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பி.எஸ்சி நர்சிங் முடித்து இந்திய நர்சிங் கவுன்சில் பதிவுசெய்து ஐசியூ, டயாலிசிஸ் யூனிட், வென்டிலேட்டர்களில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Pharmacists - 10
சம்பளம்: மாதம் ரூ.29,200
வயதுவரம்பு: 18 முதல் 33க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மருந்தியல் பிரிவில் டிப்ளோமா முடித்து “மருந்தாளுநராக” பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: Lab Assistant - 10
சம்பளம்: மாதம் ரூ.21,700
வயதுவரம்பு: 18 முதல் 33க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியலில் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளோமா (டி.எம்.எல்.டி)  முடித்திருக்க வேண்டும். 

பணி: Radiographer - 12
சம்பளம்: மாதம் ரூ.29,200
வயதுவரம்பு: 18 முதல் 33க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று  ரேடியோகிராபி, எக்ஸ்-ரே டெக்னீசியன், ரேடியோ நோயறிதல் தொழில்நுட்பப் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் பி.எஸ்சி பட்டத்துடன் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பணி: Hospital Attendant and Housekeeping Assistant - 101
சம்பளம்: மாதம் ரூ.18,000
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.சி.யூ, டயாலிசிஸ் பிரிவில் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுவார்கள். 

விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியானவர்கள் தங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை tpjcovidcontractaug@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.08.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://sr.indianrailways.gov.in/cris/uploads/files/1596717770151-Engagement%20of%20Medical%20personnel%20and%20Para%20medical%20staff%20-Contract%20basis-%20%20Covid%2019.pdf
என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.


புதியது பழையவை