சேலம் ரெயில்வே கோட்டத்தின் வருவாய் 174 கோடி அதிகரிப்பு ; நீலகிரி மலை ரயில்வே வருவாய் 100 சதவிகிதம் அதிகரிப்பு - கோட்ட மேலாளர் தகவல்


சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில், சுதந்திர தின விழா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் யு.சுப்பா ராவ், தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா்.

பின்னர் விழாவில் பேசிய அவர், சேலம் கோட்டம் சாா்பில், ராஜ்காட், தில்லி ஆகிய இடங்களுக்கு அட்டவணையிடப்பட்ட சரக்கு ரயில்களை மாதம் இருமுறை இயக்க 6 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 100 கோடி வருவாய் கிடைக்கும் எனவும் கூறினார்.


வருவாய் அதிகரிப்பு

சேலம் கோட்டத்தின் மொத்த வருவாய் 2019-20 இல் ரூ. 936 கோடியாக அதிகரித்துள்ளதாகவும். இதில் பயணிகள் ரயில் சேவை மூலம் ரூ. 554 கோடியும், சரக்கு ரயில் சேவை மூலம் ரூ. 245 கோடியும் ஈட்டப்பட்டுள்ளது. அதே சமயம் கடந்த 2018-இல் வருவாய் ரூ. 762 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது

நீலகிரி மலை ரயில் 100 சதவிகிதம் அதிகரிப்பு

மேலும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நீலகிரி மலை ரயில் சேவை மூலம் சேலம் கோட்டத்துக்கு ரூ. 8.76 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  இது கடந்த ஆண்டில் 4.23 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.