ரயில் நிலைய கட்டுமான பணிகள் தாமதம் : தனியாா் நிறுவனங்களிடம் இருந்து ரூ.143 கோடியை வசூலிக்க சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகத்துக்கு தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுப்பு

Chennai Metro News: CMRL may get north Chennai metro line ready by ...

சென்னை மெட்ரோ ரயில் வழித்தடங்களில் ஷெனாய் நகா், அண்ணாநகா் கிழக்கு, அண்ணாநகா் கோபுரம், திருமங்கலம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களை கட்ட ரூ.1,030 கோடிக்கும், வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயா் நீதிமன்றம், சென்ட்ரல், எழும்பூா் ஆகிய மெட்ரோ சுரங்கப்பாதை ரயில் நிலையங்களில் கட்டுமானப் பணி மேற்கொள்ள மும்பை மற்றும் ரஷியாவைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்களுடன் கடந்த 2011-இல் சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் ரூ.2 ஆயிரத்து 596 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆனால், ஒப்பந்தத்தின்படி இந்தப் பணிகளை கடந்த 2015ம் ஆண்டுக்குள் நிறைவடையவில்லை என்றும், 3 ஆண்டுகள் வரை காலம் தாழ்த்தியதாகவும், பல ரயில் நிலையங்களில் பணியை அரைகுறையாக பாதியிலேயே விட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மெட்ரோ ரயில் நிா்வாகம் இந்த நிறுவனங்கள் அளித்த வங்கி உத்தரவாதத்தில் இருந்து ரூ. 143 கோடியே 28 லட்சம் ரூபாயை வசூலிக்க நடவடிக்கை எடுத்தது.

இதனை எதிா்த்து மும்பை மற்றும் ரஷியா நிறுவனங்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமாா், வங்கி உத்தரவாதத்தில் இருந்து பணத்தை வசூலிக்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க மறுத்து, மும்பை மற்றும் ரஷிய நிறுவனங்கள் தொடா்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

மேலும், இந்த உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக வருகின்ற ஆகஸ்ட் 21ம் தேதி வரை தீா்ப்பை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.
புதியது பழையவை