சமீபத்திய செய்திகள்

10/recent/ticker-posts

ஏப்ரல் மாதத்தில் 135.85 கோடி வருவாய் ஈட்ட தெற்கு ரயில்வே 1454.53 கோடி செலவு !


கொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் நாடு முழுவதும் இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. தற்போது இதனை ஆகஸ்ட் 12ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

இந்நிலையில் இந்திய ரயில்வேயின் வருவாய் குறைந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தெற்கு ரயில்வே 135.85 கோடி வருவாய் ரூபாய் ஈட்டியுள்ளது. அதே சமயம் தெற்கு ரயில்வே 1454.53 கோடி ரூபாய் செலவழித்துள்ளது‌.

தெற்கு ரயில்வேயின் வருவாய்க்கும் செலவினத்திற்கும் இடையே ரூபாய் 1318.68 கோடி பற்றாக்குறை இடைவெளி ஏற்ப்பட்டுள்ளது‌. 

இதே போல நாட்டின் அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் வருவாய்க்கும் செலவினத்திற்கும் இடையே உள்ள பற்றாக்குறை இடைவெளி அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டில் உள்ள 17 மண்டலங்களின் வருவாய் ரூபாய் 4983.89 கோடியாக உள்ளது. அதே சமயம் இந்திய ரயில்வே ரூபாய் 19334.39 கோடி செலவழித்துள்ளது‌. இந்தியன் ரயில்வேயின் வருவாய்க்கும் செலவினத்திற்கும் இடையே ரூபாய் 14350.5 கோடி பற்றாக்குறை இடைவெளி ஏற்ப்பட்டுள்ளது‌. 

பயணிகள் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், சரக்கு ரயில் சேவை மட்டும் தொடரந்து இயக்கப்பட்டு வருகிறது. இதனால் ரயில்வேயின் வருவாய் மிகவும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.