தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் 11 ஜோடி ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம் : 2 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக இயங்காது !

நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் ஏற்படும் நெரிசலை குறைக்க 50 ஜோடி ரயில்களின் வழித்தடத்தை மாற்றியமைக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் 11 ஜோடி ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு :

1. 19419/19420 சென்னை சென்ட்ரல் 🔄 அகமதாபாத் விரைவு ரயில் (வாரம் இருமுறை).
சென்னையில் இருந்து அரக்கோணம், ரேனிகுண்ட வழியாக செல்லும் இந்த ரயில் இனி பணவேல் ரயில் நிலையம் வழியாக செல்லாது. அதற்கு பதிலாக கல்யாண் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

2. 22919/22920 சென்னை சென்ட்ரல் 🔄 அகமதாபாத் அதிவிரைவு ஹம்ஸபார் ரயில் (வாராந்திர).
சென்னையில் இருந்து ரேனிகுண்ட வழியாக செல்லும் இந்த ரயில் இனி பணவேல் ரயில் நிலையம் வழியாக செல்லாது. அதற்கு பதிலாக கல்யாண் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

3. 12253/12254 யஸ்வந்த்புர் 🔄 பாகல்பூர் 'அங்கா, அதிவிரைவு ரயில் (வாராந்திர).
ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேனிகுண்ட வழியாக செல்லும் இந்த ரயில், இனி ஹௌரா, சான்றாகச்சி ரயில் நிலையங்கள் வழியாக செல்லாது. அதற்க்கு பதிலாக டன்குனி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

4. 12507/12508 திருவனந்தபுரம் 🔄 சிலச்சர் அதிவிரைவு ரயில் (வாராந்திர)
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், ஓங்கோல் வழியாக செல்லும் இந்த ரயில், இனி ஹௌரா, சான்றாகச்சி ரயில் நிலையங்கள் வழியாக செல்லாது. அதற்க்கு பதிலாக டன்குனி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

5. 12509/12510 பெங்களூர் கண்டோன்மெண்ட் 🔄 கவுகாத்தி அதிவிரைவு ரயில் (வாரத்தில் மூன்று முறை)
ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், ஓங்கோல் வழியாக செல்லும் இந்த ரயில், இனி ஹௌரா, சான்றாகச்சி ரயில் நிலையங்கள் வழியாக செல்லாது. அதற்க்கு பதிலாக டன்குனி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

6. 12515/12516 திருவனந்தபுரம் 🔄 சிலச்சர் அதிவிரைவு ரயில் (வாராந்திர)
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், ஓங்கோல் வழியாக செல்லும் இந்த ரயில், இனி ஹௌரா, சான்றாகச்சி ரயில் நிலையங்கள் வழியாக செல்லாது. அதற்க்கு பதிலாக டன்குனி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

7. 15227/15228 யஸ்வந்த்புர் 🔄 முஸாப்பர்பூர் விரைவு ரயில் (வாராந்திர).
ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், விஜயவாடா வழியாக செல்லும் இந்த ரயில், இனி ஹௌரா, சான்றாகச்சி ரயில் நிலையங்கள் வழியாக செல்லாது. அதற்க்கு பதிலாக டன்குனி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

8. 22501/22502 பெங்களூர் 🔄 நியூ தின்சுகிய அதிவிரைவு ரயில் (வாராந்திர)
ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், நெல்லூர் வழியாக செல்லும் இந்த ரயில், இனி ஹௌரா, சான்றாகச்சி ரயில் நிலையங்கள் வழியாக செல்லாது. அதற்க்கு பதிலாக டன்குனி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

9. 15929/15930 தாம்பரம் 🔄 திப்ருகர் விரைவு ரயில் (வாராந்திர)
சென்னை எழும்பூர், நெல்லூர் வழியாக செல்லும் இந்த ரயில் இனி டெஹ்மாஜி, வடக்கு லக்மிபுர், ஹர்முட்டி, விஸ்வநாத் சாராளி, ரங்கபர வடக்கு, நியூ மிசமாறி, உடல்குறி, டாங்லா வழியாக செல்லும்.

10. 12295/12296 பெங்களூர் 🔄 தனப்பூர் அதிவிரைவு ரயில் (தினசரி)
ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், சென்னை சென்ட்ரல், கூடுர் வழியாக செல்லும் இந்த ரயில், இனி சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது. பெரம்பூரில் இருந்து கூடுர் நோக்கி செல்லும்.

11. 12687/12688 மதுரை 🔄 டெஹ்ராடூன்/சண்டிகர் அதிவிரைவு ரயில் (வாரத்தில் இருமுறை)
திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி, அரக்கோணம், சென்னை சென்ட்ரல், நாயடுப்பேட்டை வழியாக செல்லும் இந்த ரயில், இனி சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது. அரக்கோணத்தில் இருந்து பெரம்பூர் வழியாக நாயடுப்பேட்டை நோக்கி செல்லும். 

மேற்கொண்ட மாற்றங்கள் எதிர்வரும் புதிய அட்டவணையில் இருந்து அமல்படுத்தப்படுவதாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. 

கருத்துரையிடுக

புதியது பழையவை