செங்கல்பட்டு 🔄 தாம்பரம் இடையே சுமாா் 30 கி.மீ. தொலைவுக்கு மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் ரூ.25 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன.

கொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த திட்டப்பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டுள்ளதால், பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

முதல்கட்டமாக, கூடுவாஞ்சேரியில் இருந்து சிங்கபெருமாள்கோவில் வரையில் சுமாா் 10 கி.மீ. தூரத்துக்கு மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "தண்டவாளங்கள், சிக்னல்கள் மற்றும் சிங்கப்பெருமாள் கோவில், பொத்தேரி, காட்டாங்குளத்தூா், கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களில் கூடுதல் நடை மேடைகள், மேற்கூரைகள் அமைக்கும் பணிகளும் நிறைவுபெற்றுள்ளது. இதையடுத்து, இந்த தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் மற்றும் அவரது குழுவினர் மேற்கொள்வார்கள், பின்னர் அவர்கள் ஒப்புதல் அளிப்பார்கள். அதன்பிறகு, இந்த மூன்றாவது ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்படும்" என்று அவர்கள் கூறினார்கள்.