ரயில்வேக்கான கொள்முதல் செயல்பாட்டில் மேக் இன் இந்தியா தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை திரு. பியூஷ் கோயல் மதிப்பாய்வு செய்கிறார்.

இந்திய ரயில்வே மற்றும் இந்திய அரசாங்கத்தின் கொள்முதல் செயல்பாட்டில் மேக் இன் இந்தியா தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ரயில்வே மற்றும் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் திரு. பியூஷ் கோயல் ஆய்வு செய்தார்.

கூட்டத்தின் போது, ​​திரு. பியூஷ் கோயல் இந்திய ரயில்வேயில் ஊழல் இல்லாத வெளிப்படையான கொள்முதல் சூழலில் தொழில்துறையில் நம்பிக்கையை உருவாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

கொள்முதல் செயல்பாட்டில் மேக் இன் இந்தியா தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மறுஆய்வு செய்யும் போது, ​​கொள்முதல் செயல்பாட்டில் உள்ளூர் விற்பனையாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

உள்ளூர் விற்பனையாளர்கள் / சப்ளையர்களிடமிருந்து அதிக ஏலங்களைப் பெறக்கூடிய வகையில் கொள்முதல் செய்யும் உள்ளூர் உள்ளடக்க விதிமுறை இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இது சுயசார்பு இந்தியா இயக்கத்திற்கு ஊக்கமளிக்கும். இந்த திசையில் இந்திய ரயில்வேயின் முயற்சிகளை எளிதாக்குவதற்கு, தேவைப்பட்டால், பொருத்தமான கொள்கைத் திருத்தங்களை செய்ய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (DPIIT) ஆதரவு கோரப்பட்டது.

மேக் இன் இந்தியாவை மேம்படுத்துவது குறித்து விளக்கிய ரயில்வே வாரிய உறுப்பினர் (பொருள்கள் மேலாண்மை), GeM மூலம் பொருள்கள் வாங்குவதற்கான நடவடிக்கைகள்  எடுக்கப்படுவது குறித்த விரிவான விளக்கக்காட்சியும் பகிரப்பட்டது.

மறுஆய்வுக் கூட்டத்தில் ரயில்வே மாநில அமைச்சர் திரு. சுரேஷ் சி அங்கடி, ரயில்வே வாரிய உறுப்பினர்கள், தலைமை நிர்வாக அதிகாரி / GeM மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய சேவை வழங்குநர்கள் மற்றும் உட்கூறு உற்பத்தியாளர்களின் பங்களிப்பை மேலும் அதிகரிப்பதற்கான உத்திகளை வகுக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டது. அரசாங்க மின்-சந்தை (GeM) என்பது உலகெங்கிலும் உள்ள பொதுக் கொள்முதல் செய்யும் முறையில் மிகவும் புதுமையான யோசனையாகும். தொலைதூர இடங்களிலும், குறிப்பாக மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிலும் கூட சந்தைக்கு தொழில் திறக்க GeM இயங்குதளத்தில் சுமார் எழுபதாயிரம் கோடி ரயில்வே பொருள்கள் மற்றும் சேவைக் கொள்முதல் செய்ய வேண்டியதன் அவசியத்தை திரு. கோயல் வலியுறுத்தினார்.

இந்திய அரசின் மிகப்பெரிய கொள்முதல் நிறுவனங்களில் ஒன்றான இந்திய ரயில்வே, அதன் கொள்முதல் முறைகளை GeM உடன் ஒருங்கிணைத்து GeM -இன் முழுத் திறனையும் பயன்படுத்துகிறது. இந்திய ரயில்வே மின்-கொள்முதல் முறையை GeM உடன் ஒருங்கிணைப்பதற்கான காலக்கெடுவை ரயில்வே துறை பகிர்ந்து கொண்டது. எந்தவொரு இடைத்தளக் கையேடு பயன்படுத்தும் தேவையை நீக்கி இரண்டு அமைப்புகளின் தடையற்ற ஒருங்கிணைப்பின் அவசியத்தை ரயில்வே வலியுறுத்தியது. இரு அமைப்புகளின் வலிமையும், அதாவது ரயில்வே இந்திய ரயில்வே எலக்ட்ரானிக் கொள்முதல் அமைப்பு (IREPS) மற்றும் GeM ஆகியவை ரெயில்வே கொள்முதலை GeM முழுத் திறனையும் எடுத்துச் செல்ல கூட்டு விளைவை உருவாக்க உற்பத்தி ரீதியாக செயல்படவேண்டும்.

GeM க்கு பிந்தைய இந்திய அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பு, அனைத்து ஏஜென்சிகளும் ஒற்றைப் புள்ளி பொதுக் கொள்முதல் போர்ட்டலாக மாறும் திசையில் மேலும் நகரும் நோக்கம் கொண்டது.

இந்தியாவில் ஊழல் இல்லாத பொதுக் கொள்முதல் சூழலை உருவாக்குவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் மதிப்பாய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதுன், இதில் ரயில்வே அமைச்சகம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை (DPIIT) மற்றும் GeM ஆகியவற்றிற்கு முக்கிய பங்கு இருப்பதும் வலியுறுத்தப்பட்டது. இந்திய ரயில்வேயின் வளர்ச்சி பயணத்தில் பங்கேற்க அதிக உள்நாட்டு விற்பனையாளர்களை வளர்ப்பதற்கு, அவர்கள் தொழில்துறையில் ஈடுபட வேண்டியதன் அவசியம் குறித்தும் விவாதங்களில் வலியுறுத்தப்பட்டது.

விளக்கக்காட்சியின் போது, ​​ரயில்வேயின் அனைத்து நடவடிக்கைகளும், பயனாளிகள் இணைய தளத்தில் எளிதில் கையாளும் வகையில் இருக்க கூடுதலாக வேலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. வலைத்தளம், வெளிப்படையாக, ஆர்வமுள்ள ஒவ்வொரு விற்பனையாளருக்கும் இந்திய ரயில்வேயுடன் எவ்வாறு வணிகம் செய்வது என்பது குறித்த தெளிவான யோசனையை வழங்க வேண்டும். இந்திய ரயில்வேயில் ஊழல் இல்லாத, வெளிப்படையான சூழலின் நம்பிக்கையை உருவாக்க அனைத்து தொடர்புடைய தகவல்களும் இணையதளத்தில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 


Railways to ensure its goods and services procurements through Government e-Market GeM with integration of Railway Digital Supply Chain with GeM. Railway procures goods and services more than Rs 70000 crores annually
Shri Piyush Goyal reviews the steps to promote Make in India products in procurement process for Railways. Detailed performance review of Materials Management In Indian Railways undertaken


Minister of Railways and Commerce & Industry Shri Piyush Goyal reviewed the steps to promote Make in India products in procurement process of Indian Railways as well as Government of India.

 

During the meeting, Shri Piyush Goyal urged to take measures to generate confidence in industry of corruption free and transparent procurement environment on Indian Railways.

 

While reviewing the steps to promote Make in India products in procurement process, it was emphasised to increase the participation of local vendors in procurement process. It was also decided to that local content clause in the procurement should be such that we may get more bids from local vendors/suppliers. This would also give a boost to mission Atma Nirbhar Bharat. Active support of DPIIT was sought to make suitable policy revisions, if required, to facilitate the efforts of Indian Railways in this direction.

 

It was felt that encouragement needs to be given to such vendors who can supply higher locally manufactured content. It was also suggested to create a FAQ section and a helpline number so that vendors may get clarity on various issues relating to procurement process.

 

Detailed presentation was made by the Member (Materials Management), Railway Board on enhancing Make in India and steps being taken to procure through GeM along with the progress made.

 

The review meeting was also attended by Minister of State of Railways Shri Suresh C Angadi , Railway Board Members, CEO/GeM and representatives of DPIIT, Ministry of Commerce.

 

A need for devising strategies for further increasing the participation of Indian service providers and component manufacturers was felt. Government e-Marketplace (GeM) is a highly innovative idea in public procurement, across the globe. Shri Goyal emphasised the need to do Railway goods and services procurements of approximately Rs Seventy thousand crores on GeM platform to open up the market to industry even at remote places and specially MSMEs.

 

Indian Railways, one of the largest procurement agencies of the Government of India, is integrating its procurement systems with GeM to use GeM’s full potential. The department shared the timelines for integration of Indian Railway e-Procurement system with GeM. Railway emphasised the need to have a seamless integration of the two systems eliminating need for any manual interface. Strength of both the systems i.e. Railways IREPS and GeM should be productively leveraged to generate synergy to take the Railways procurement to GeM’s full potential.

 

Post integration GeM is intended to move further in the direction of becoming single point public procurement portal for all agencies of Government of India.

 

During the meeting ways and means to create a corruption free public procurement environment in India were discussed in which Ministry of Railways, DPIIT and GeM have extremely important roles to play.The need for engagement of industry for developing more indigenous vendors to participate in the growth journey of the Indian Railways was emphasised in the deliberations.

 

During the presentation, It was decided that Railways would work more towards having a user-friendly single step vendor web based interface for all its activities. The website should, transparently, provide every interested vendor a clear idea of how to do business with Indian Railways. The website should have all relevant information to generate confidence of corruption free and transparent environment on Indian Railways.