பாலக்காடு 🔄 கிணத்துக்கடவு இடையே பொள்ளாச்சி வழியாக ரெயில்வே ஊழியர்களுக்கு சிறப்பு ரெயில்

நாடு முழுவதும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு மட்டும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக கிணத்துக்கடவு வரை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சிக்கு 8.45 மணிக்கு வருகிறது. பின்னர் பொள்ளாச்சியில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு, கிணத்துக்கடவிற்கு 10 மணிக்கு செல்கிறது.

மறுமார்கத்தில் கிணத்துக்கடவில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு 4.45 மணிக்கு வருகிறது. பொள்ளாச்சியில் இருந்து 5.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.15 மணிக்கு பாலக்காடு செல்கிறது. 

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ரயில்கள் இயக்கி வருவதால் பொதுமக்கள் தண்டவாளங்களை கடக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும். தண்டவாளங்களின் ஓரத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடக் கூடாது என்றும் ரயில்வேத்துறை எச்சரித்துள்ளது.
புதியது பழையவை