கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை டிசம்பர் மாதத்தில் ஆதம்பாக்கம் வரை நீட்டிக்க திட்டம்

சென்னை கடற்கரை 🚊 வேளச்சேரி இடையே இயக்கப்படும் பறக்கும் ரயில் சேவையை, பரங்கிமலை ரயில் நிலையம் வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டது. இதையடுத்து, வேளச்சேரி 🛤️ பரங்கிமலை ரயில் திட்டப்பணி தொடங்கியது.

முதல்கட்டமாக, வேளச்சேரியில் இருந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வரை தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன.

இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, வேளச்சேரி-ஆதம்பாக்கம் இடையே பணிகள் முடியும் நிலையில் இருக்கின்றன. தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிந்து விட்டன.

ஆதம்பாக்கத்தில் ரயில்நிலையக் கட்டடப் பணி, நடைமேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டப் பணிகளுக்கு தேவையான நிதி உள்ளது. திட்டப்பணிகள் முடிந்தபிறகு, ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஆய்வு செய்வாா். தொடா்ந்து, கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ஆதம்பாக்கம் வரை நீட்டிக்கப் படும் என்றனா்.

மேலும் ஆதம்பாக்கம்-பரங்கிமலை ரயில் திட்டப் பணிக்கு இருந்த பிரச்னைக்குத் தீா்வு கிடைத்துள்ளாதகவும் அவர்கள் கூறினர்.