தனியார் ரயில்கள் அறிமுகம் தொடர்பான தகவல் குறித்த விளக்கம் - ரெயில்வே அமைச்சகம்

தனியார் ரெயில்கள் தொடர்பாக ரெயில்வே அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

‘’தனியார் ரயில்கள் அறிமுகத்துக்கான கால அறிவிப்பு’’ தொடர்பாக வெளியாகியுள்ள சில செய்திகளில்,  “தனியார் ரயில்கள் திட்டம் மார்ச் 2024 முதல் தொடங்கும்’’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாகஊடகக் குழுமத்தில் நேற்றுஅதாவது 18, ஜூலை 2020 அன்று விளக்கம் வெளியிடப்பட்டதுஅது தற்போது மீண்டும் வெளியிடப்படுகிறது.

தனியார் ரயில்களை 2023 மார்ச் மாதத்திலிருந்து மட்டுமே இயக்க காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கான டெண்டர்கள் மார்ச் 2021 –இல் இறுதி செய்யப்படும்ரயில்கள் 2023 மார்ச் முதல் இயக்கப்படும்.

முந்தைய காரணத்தால் தவறான தகவல் வெளியாகியிருந்தால்,  மேற்கூறிய தகவல்களை உண்மைத் தகவலாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.