திருச்சி ரயில் நிலையத்தில் அதிநவீன வசதிகளுடன் பயணிகள் ஓய்வு அறைகள்

பயணிகளுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய ரயில்வே பல வசதிகளை பல முக்கிய ரயில் நிலையங்களில் மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில், திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகள் நடைமேடை புதுப்பிக்கப்பட்டுள்ளது, பயணிகள் நடந்து செல்லும் பாதையில் மேற்கூரை மற்றும் ரயில் நிலையத்தை அணுக சாலைகள் போடப்பட்டுள்ளது.


மேலும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக பயணிகள் ஓய்வறை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.


*இதில் பயணிகள் ஓய்வறை நன்றாக வடிவமைக்கப்பட்டு, சிறப்பாக ஒளியமைப்பு செய்யப்பட்டு, முழுவதுமாக குளிரூட்டப்பட்டுள்ளது. 

*தரமான படுக்கைகள் மற்றும் படுக்கை விரிப்புக்கள் வழங்கப்படுகிறது.

*அறைகளில், பயணிகளின் பைகள் மற்றும் இதர சாமான்களை வைப்பதற்காக அலமாரி, பூட்டும் வசதி கொண்ட லாக்கர் ஆகியவை உள்ளது.

*நன்றாக பயிற்சி பெற்ற தொழில்முறை விதிமுறைகளை நன்கு அறிந்த தொழில்முறை உதவியாளர்கள். 

*பயணிகளுக்கு ரூம் சர்வீஸ் வசதி.

*ஒவ்வொரு ஓய்வறையிலும் LED தொலைகாட்சிப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

*குளியலறைகளில் நவீன வசதிகள்.

*அறைகள் மற்றும் டார்மெட்டரிகளில் தொலைபேசி inter-com வசதி உள்ளது.

*உணவு மற்றும் பானங்கள் (F&B) அறை சேவை அழைப்பில் கிடைக்கிறது.

*ஒவ்வொரு அறையிலும் மின்னணு தேனீர் kettle உடன் தேனீர் மற்றும் காபி செய்வதற்கான பொருட்களும் கொடுக்கப்படுகிறது. மேலும்  சோபா மற்றும் புல்வெளியுடன் சூட் அறையும் கிடைக்கிறது.

அறைகள் வகைகள்.

திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் ஓய்வறை வசதியில், 9 குளிரூட்டப்பட்ட டீலக்ஸ் அறைகள் (இருவர்), 2 குளிரூட்டப்பட்ட சூப்பர் டீலக்ஸ் அறைகள் (இருவர்), ஒரு குளிரூட்டப்பட்ட சூட் அறை (இருவர்), 5 குளிரூட்டப்பட்ட சூட் குடும்ப அறைகள் (மூவர்), ஒரு குளிரூட்டப்பட்ட டீலக்ஸ் குடும்ப அறை (ஐந்து நபர்கள்) ஆகியவை உள்ளன.

கட்டணம்.

குளிரூட்டப்பட்ட டீலக்ஸ் இருவர் தங்கும் அறை 12 மணி நேரத்திற்கு ரூபாய் 1,500/- என்ற கட்டணத்திலும், 24 மணி நேரத்திற்கு ரூபாய் 2,400/- என்ற கட்டணத்திலும் கிடைக்கிறது.

அதே போல் குளிரூட்டப்பட்ட Cabin (Dormitory) 12 மணி நேரத்திற்கு ரூபாய் 600/- க்கும் 24 மணி நேரத்திற்கு ரூபாய் 980/- க்கும் கிடைக்கிறது.