தமிழகத்தில் அடுத்த மாதத்தில் ரயில், பேருந்துகளை இயக்கலாம் - பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை (டிபிஎச்) முன்னாள் இயக்குநர் பரிந்துரை

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை (டிபிஎச்) முன்னாள் இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி கொரோனோ நோய் தொற்று குறித்து முன்னணி நாளிதழில் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் "சென்னையில் வைரஸ் தொற்றின் பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. அதேநேரத்தில், சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்தகட்டமாக, சிறிய நகரங்களில் பாதிப்பு ஏற்பட்டு பின்னர் குறையும். நவம்பர் மாதம் இறுதியில் வைரஸ் தொற்றின் பாதிப்பு குறைந்துவிடும். இனிமேல் ஊரடங்கு தேவையில்லை. அடுத்த மாதத்தில் (ஆகஸ்ட்) இருந்து ரயில்கள், பேருந்துகளை இயக்கலாம்" என்று கூறியுள்ளார்.

மேலும் சில மாதங்களுக்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும். அடிக்கடி சோப்பு போட்டு நன்றாக கை கழுவ வேண்டும் என்றும். வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்காமல் இருக்க வெளியே செல்லும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.