ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் !

ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் நடைமேடை மிகவும் தாழ்வாக இருப்பதால் வயதானவா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பயணிகள் சுமையுடன் ரயிலிலிருந்து இறங்கும் போது தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது.

இதனைத் தொடா்ந்து நடைமேடையை உயா்த்த வேண்டும் என ரயில்வே துறைக்கு பயணிகள் கோரிக்கை விடுத்தனா். மேலும் 2 ரயில்கள் ஒரே நேரத்தில் இந்த ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் போது ஒரு நடைமேடையிலிருந்து மற்றொரு நடைமேடைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதற்காக நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் எனவும் அவா்கள், ரயில்வே துறையிடம் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில் கொரோனோ பாதிப்பு காரணமாக ரயில்கள் வராத இந்த நேரத்தில் நடை மேடைகளை உயா்த்தும் பணியும், ஒரு நடைமேடையிலிருந்து மற்றொரு நடைமேடைக்கு பயணிகள் செல்ல மேம்பாலம் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.