சென்னை எழும்பூர் 🔄 திருவனந்தபுரம் பார்சல் சிறப்பு ரயிலில் எல்.ஹெச்.பி. சரக்கு பெட்டிகள் இணைப்பு

ரயில்வேயில் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தெற்கு ரயில்வேயில் சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்தவும், வருவாயைப் பெருக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் புதிய எல்.ஹெச்.பி. பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலில் உயா் திறன் கொண்ட பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஜொ்மன் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு ரயிலின் முதல் சேவை சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் இடையே இயங்கி வரும் பார்சல் சிறப்பு ரயிலில் கடந்த திங்கள்கிழமை இணைக்கப்பட்டது.எல்.ஹெச்.பி. சரக்கு ரயில் பெட்டியின் சிறப்பம்சம்.


  • இந்த ரயிலில் அதிக அளவு சரக்குகளை எடுத்துச் செல்ல முடியும்.
  • மற்ற சரக்கு ரயில் பெட்டிகளை விட, இந்த ரயில் பெட்டியின் நீளம் மற்றும் உயரம் அதிகமாக இருக்கும்.
  • இந்த ரயில் 130 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கும் திறன் கொண்டது.

புதியது பழையவை