இதனை தொடர்ந்து முதன்மை ரயில்களான பாண்டியன், நெல்லை மற்றும் பியர்ல் சிட்டி எக்ஸ்பிரஸ் 7 மணி 50 நிமிடங்கள் முதல் 8 மணி 20 நிமிடங்கள் வரை பயணிக்கின்றன.
இதற்கிடையில் ரயில் தண்டவாளங்களை மேம்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. தடங்களில் உள்ள தூசி மற்றும் மண்ணை நீக்குதல், பலகீனமாக உள்ள இணைப்புகளை சரி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்துள்ளன.
இந்நிலையில் ரயில்களின் வேக வரம்பை 100 முதல் 110 கி.மீ வேகத்தில் அதிகரிக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (சி.ஆர்.எஸ்) ஒப்புதல் அளித்துள்ளார்.
இருப்பினும், வேக வரம்பை அதிகரிப்பதற்கு முன் தெற்கு ரயில்வே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தலோடு அதிகாரி கே ஏ மனோகரன் ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் தேதியை தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதன் மூலம் பயண நேரம் குறையும். அல்லது தற்போதைய அட்டவனைப்படி ரயில்கள் நேரம் தவறாமல் இயக்க வழிவகுக்கும்.