பயணிகள் ரயில்களை ரத்து செய்ய வேண்டும் என சில மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் தகவல்


கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சில பயணிகள் ரயில்களை ரத்து செய்யுமாறு மாநிலங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன.

தமிழ்நாடு, ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் பயணிகள் ரயில்களை ரத்து செய்ய கோரிக்கை வைத்துள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். இல்லையென்றால் ரயில்களின் சேவைகளை குறைக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளன என்று குறிப்பிட்டார்.

இதன் காரணமாக புதிய ரயில்கள் எதுவும் அறிவிக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அத்தியாவசிய போக்குவரத்துக்காக சில ரயில்களை இயக்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் கொரொனா பாதிப்பு நிலைமையையும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், மாநில அரசுகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஒரு சில மாநிலங்களில் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.