சென்னை ராயபுரம் - கனக்பூர் இடையே சிறப்பு பார்சல் ரயில் சேவை

சென்னை ராயபுரத்தில் இருந்து, ராஜஸ்தான் மாநிலம், கனக்பூருக்கு வாராந்திர சிறப்பு சரக்கு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில், ராஜஸ்தான் மாநிலம், கனக்பூரில் இருந்து, இன்று(ஜூலை 31) பிற்பகல், 1:00 மணிக்கு புறப்பட்டு, வரும் திங்கட்கிழமை அதிகாலை, 2:00 மணிக்கு ராயபுரம் வந்தடையும்.

மறுமார்கத்தில் சென்னை ராயபுரத்தில் இருந்து, ஆகஸ்ட் 3ம் தேதி பிற்பகல், 1:00 மணிக்கு புறப்பட்டு, வியாழக்கிழமை அதிகாலை, 3:45 மணிக்கு கனக்பூர் சென்றடையும்.

இந்த ரயிலில், மருந்துகள், மருத்துவ உபயோகப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்களும் அனுப்பலாம்.