பாலக்காடு டவுன் 🔄 திண்டுக்கல் வழித்தடத்தை மின்மயமாக்கும் பணிகள் பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே துவக்கம்.

திண்டுக்கல் ➡️ பொள்ளாச்சி ➡️ பாலக்காடு (179 கி.மீ.,) பொள்ளாச்சி ➡️ போத்தனுார் (40 கி.மீ.,) ரயில் வழித்தடங்களை மின்மயமாக்கும் திட்டத்தை தெற்கு ரயில்வே கடந்த பிப்ரவரி மாத நிதி நிலை அறிக்கையில் அறிவித்திருந்தது.

இத்திட்டத்தை ரயில்வே மின்மயமாக்கலுக்கான மத்திய பிரிவு மேற்கொள்கிறது.


இதில், திண்டுக்கல் - பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தை மின்மயமாக்கும் பணிக்கு, 159.08 கோடி ரூபாயும், பொள்ளாச்சி - போத்தனுார் வழித்தடத்தை மின்மயமாக்க, 37.36 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

இரண்டாண்டுகள் நடக்கும் இந்த பணிக்கு, முதல் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல் - பொள்ளாச்சி - பாலக்காடு தடத்திற்கு 25 கோடியும், பொள்ளாச்சி - போத்தனுர் தடத்திற்கு 20 கோடியும் என, 45 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு பட்ஜெட்டில், அந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் முதற்கட்டமாக பாலக்காடு ➡️ பொள்ளாச்சி ➡️ திண்டுக்கல் தடத்தில் மின்சார கம்பம் அமைப்பதற்கான அடித்தளம் அமைக்கும் பணி பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே துவங்கியுள்ளது என பாலக்காடு ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. மேலும் அதற்கான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.