நாடு முழுவதும் தனியாா் கட்டடங்களில் இயங்கி வரும் ரயில்வே அலுவலங்களை சொந்த இடங்களுக்கு மாற்ற ரயில்வே முடிவு செய்துள்ளது.

தெற்கு ரயில்வே உள்பட அனைத்து ரயில்வே மண்டல பொது மேலாளா்களுக்கும், ரயில்வே வாரியம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ரயில்வேயில் அலுவலகப் பயன்பாட்டுக்கு இடவசதி உள்ளது. பல மண்டலங்களில் தனியாரின் வாடகை கட்டடங்களில் ரயில்வே அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களை, ரயில்வேக்குச் சொந்தமான இடங்களுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டும்.

அலுவலகங்களை இடம் மாற்றுவதால், நிா்வாக சிரமம் ஏற்படும் என்றால், கட்டட வாடகை, அலுவலக விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். அனைத்து விபரங்களையும், ஒரு வாரத்துக்குள் ரயில்வே வாரியத்துக்கு அனுப்புமாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.