ரயில் டிக்கெட் பரிசோதனைக்கு புதிய செயலி அறிமுகம்

Picture courtesy - ANI

நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு துறை சார்ந்த நடவடிக்கைகள், மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் ரயில் பயணத்தின்போது பொதுவாக டிக்கெட் பரிசோதனை செய்யப்படும். இதில் டிக்கெட் மட்டுமின்றி, அடையாள அட்டையும் பரிசோதனை செய்யப்படும். 

இந்நிலையில், டிக்கெட் பரிசோதகரும், பயணிகளும் தொடர்பு கொள்ளாத வகையில் ஒரு புதிய செயலியை மத்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸில் தொடர்பு இல்லாத டிக்கெட் சோதனைக்காக 'செக்இன் மாஸ்டர்' என்ற பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வேயின் மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

Picture Courtesy - ANI

இதன் மூலமாக பி.ஆர்.எஸ் மற்றும் யு.டி.எஸ் டிக்கெட்டுகளை குறிப்பிட்ட தூரத்தில் இருந்து சரிபார்க்க முடியும். இந்த செயலியில் உள்ள க்யூ. ஆர். கோடு ஸ்கேன் செய்யப்பட்டு டிக்கெட் பரிசோதிக்கப்படுகிறது.

ரயில் நிலையத்தின் நுழைவாயிலை கடந்து செல்லும்போது இந்த க்யூ. ஆர். கோடை காட்டினால் அது முழு விபரங்களையும் செயலி மூலமாக தெரிவித்துவிடும்.

மேலும் இந்த வசதி விரைவில் அனைத்து ரயில்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.