காரைக்கால் - பேரளம் அகல ரயில்பாதைத் திட்டத்தை முடக்காமல் விரைந்து செயல்படுத்த வேண்டும் : திமுக வலியுறுத்தல்

காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது பின்வருமாறு ;

காரைக்காலில் இருந்து பேரளம் வரை புதிய அகல ரயில்பாதைப் பணிக்காக மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்தது. ஏறக்குரைய ரூ.300 கோடி திட்டத்தில், முதல்கட்டமாக ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்து, 4 பிரிவுகளாக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, பணியாணையும் வழங்கப்பட்டது.

ஆனால் பணிகள் தொடங்கவேண்டிய நேரத்தில் பணியை மத்திய அரசு நிறுத்தச் சொல்லியுள்ளதாக அறிகிறோம். எனவே, புதுச்சேரி எம்.பி.க்கள் இருவரும் இதில் தலையிட்டு பணியை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.