ரயில்வே வர்த்தக வளர்ச்சி பிரிவு பாலக்காடு கோட்டத்தில் துவக்கம் - பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் கூட்ஸ் ஷெட் வசதி

மீட்டர் கேஜ் கால புகைப்படம்

ரயில் சேவை வாயிலாக, சரக்கு போக்குவரத்தை எளிமைப்படுத்தி, தொழில் வளர்ச்சிக்கு துணை செய்யும் நோக்கில், பாலக்காடு கோட்டத்தில் வர்த்தக வளர்ச்சி பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, வேளாண் உற்பத்தி பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், தொழிற்சாலை மூலப்பொருட்கள், உற்பத்தி பொருட்களை ரயிலில், கொண்டு வரலாம்; விரும்பும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கலாம்.

இதற்கு முன், அதிகளவிலான சரக்குகளை, தனி 'கூட்ஸ்' ரயிலை வாடகைக்கு எடுத்து கொண்டு வரும் முறை நடைமுறையில் உள்ளது. இந்த புதிய ஏற்பாடால், குறைந்த அளவிலான பொருட்களையும் அனுப்பலாம்.

இந்நிலையில் பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளர் பிரதாப் சிங் ஷாமி வர்த்தக வளர்ச்சி பிரிவை அமைத்துள்ளார்.

இதே போன்று, திருவனந்தபுரம், திருச்சி, சேலம், சென்னை மற்றும் மதுரை கோட்டங்களிலும் வர்த்தக வளர்ச்சி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய பிரிவின் கீழ், பாலக்காடு கோட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி உள்பட 10 கேரளா ரயில் நிலையங்களிலும், 2 கர்நாடக ரயில் நிலையங்களிலும் பொருட்களை இறக்கி ஏற்றும் 'கூட்ஸ் ஷெட்' வசதி மேற்கொள்ளப்படும்.

மேலும் தகவல்களை அறிய, வர்த்தகர்கள், வர்த்தக பொருட்கள் போக்குவரத்து பிரதிநிதிகள், பாலக்காடு கோட்ட வர்த்தக வளர்ச்சி பிரிவு அலுவலர்களை, 0491 2556198, 97467 63956 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

BUSINESS DEVELOPMENT UNIT IN PALAKKAD DIVISION TO ENHANCE FREIGHT BUSINESS

A Business Development Unit (BDU) at Palakkad Railway Division has been set up to cater to the  transportation needs of various sectors, including non-bulk goods traffic like white goods, finished goods,  manufactured products,  Agricultural produce and raw materials. The BDU will facilitate industry, trade representatives, and rail freight customers to get in touch with the Railways at appropriate Zonal and Divisional levels. It will also help in the expeditious clearance of their proposals for freight movement, which will benefit both the industry and the Railways.

The BDU has been set up by Divisional Railway Manager, Palakkad, Shri Pratap Singh Shami, in line with BDUs at Zonal and Divisional Levels as per directions from the Ministry of Railways. In addition to Palakkad, BDUs are being set up at Thiruvananthapuram, Madurai, Tiruchchirappalli, Chennai and Salem.

The BDU will work under the supervision of ADRM-II, Shri C.T. Sakkeer Hussain, IRPSShri P.L. Ashok Kumar, IRTS, Senior Divisional Operations Manager is the convener and Shri Jerin G. Anand, IRTS Senior Divisional Commercial Manager, Shri K.V. Sundaresan, IRSME Senior Divisional Mechanical Engineer, Shri A.P. Sivachandar, IRAS , Senior Divisional Finance Manager are the members of BDU.

The members of BDU will initiate steps to attract new streams  of  traffic  by  interacting  with  trade  and  industry  at frequent intervals; to understand the existing pattern of goods transportation and explore the possibility of attracting additional freight traffic to Railways.  The BDU will also serve as a nodal point for  speedy operationalisation of new traffic proposals after due analysis.

Business Development Unit of Palakkad Division can be contacted on: 0491 2556198 (BSNL), 97467 63956(Mobile)ccpgt@pgt.railnet.gov.incomlpgt@gmail.com 

 

 LOADING/ UNLOADING FACILITIES IN PALAKKAD DIVISION

        In Palakkad Division, good sheds (loading and unloading points) are available  at  Pollachi Junction, Palakkad Junction, Tirunaavaya, Angadippuram, Nilambur Road,  Kallayi, West Hill, Tikkotti, Etakkot, Valapattanam, Nileshwar, Bunder (Mangaluru Central) and Panambur ( Mangaluru Port). In order to ease the freight handling more and more facilities are being added to the goods sheds as per the directives of the Hon'ble Minister of Railways.


NEW STREAM OF TRAFFIC

        Railway is keen on exploring the new avenue of freight traffic. Recently South Central Railway moved first of its kind international  Parcel Express carrying dried red chillies  from Guntur to its destination in Bangladesh.  Recently  Palakkad  Division had transported Refined Palm Oil ( packed in 15 litre tins. and 10 litre carton boxes) in  42 BCN rake from Panambur station to Lucknow, Uttar Pradesh).  Palakkad Station also loaded KAMCO power tillers to Northern eastern states.