உலகிலேயே மிக அதிக உயரத்தில் கட்டப்படும் ரயில் பாலம்

Pictures courtesy - India Tv

மத்திய அரசு ரயில்வே துறையில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. இந்த நிலையில்தான் தற்போது உலகமே பார்த்து வியக்கும் ஒரு ரயில்வே திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.

அதன்படி உலகிலேயே மிக அதிக உயரத்தில் ரயில்வே பாலம் ஒன்று இந்தியாவில் கட்டப்பட உள்ளது. 

ஜம்மு காஷ்மீரில் சென்னப் நதியின் மேல் இந்த பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்த பாலம் மொத்தம் 1.315 கிமீ தூரத்துக்கு அமைக்கப்பட உள்ளது. இது மொத்தம் 359 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட இருக்கிறது. உலகிலேயே ரயில் பயணத்திற்காக மிகப்பெரிய உயரத்தில் அமைக்கப்பட உள்ள பாலம் இது.

இந்த பாலத்தின் உண்மையான உயரம் ஐஃபில் டவரை விட அதிகமானது. ஐஃபில் டவரை விட 30 மீட்டர் உயரம் அதிகமாக இந்த பாலம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவின் பிற மாநிலங்களை - காஷ்மீர் உடன் இது எளிதாக இணைக்கும் என்று கூறுகிறார்கள். காஷ்மீரில் கவுரி பகுதியில் இருக்கும் ரயில்வே நிலையம் அருகே இந்த பாலம் அமைக்கப்பட உள்ளது. இதில் 14 மீட்டர் பகுதி இரண்டு பக்க பாலமாக இருக்கும். இரண்டு ரயில்கள் செல்லும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.


பின்லாந்து மற்றும் ஜெர்மனியின் தொழில்நுட்பத்தில் இந்த பாலம் காட்டப்படுகிறது. வெடிகுண்டு தாக்குதல், நிலநடுக்கம் ஆகியவற்றில் கூட இது வலுவாக இருக்கும். அந்த அளவிற்கு வலிமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

260 கிமீ வேகத்தில் இந்த பாலத்தில் ரயில் செல்ல முடியும். அதேபோல் 130 வருடம் பாலம் நிலைத்து நிற்கும். 


இந்த பாலம் விரைவில் திறக்கப்படும் என்பதால் மக்கள் இப்போதே இதில் பயணிக்க ஆர்வமாக இருக்கிறார்கள்.

இந்திய ரயில்வேயின் மிகப்பெரிய திட்டமாக இது இருக்க போகிறது.