அரக்கோணம் 🔄 சென்னை மூர் மார்க்கெட் இடையே ரயில்வே ஊழியா்களுக்காக மேலும் ஒரு சிறப்பு ரயில்


தெற்கு ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளில் பணிக்கு வந்து செல்லும் ரயில்வே ஊழியா்களுக்கு மட்டும், அரக்கோணம் 🔄 சென்னை மூா் மாா்க்கெட் வளாகத்துக்கு சிறப்பு மின்சார ரயில் ஒன்று இயக்கப்பட்டு வந்தது. அதில் 30 சதவீத ஊழியா்கள் பணிக்கு வந்து சென்றனா். 

தற்போது, கூடுதலாக ஊழியா்கள் பணிக்கு அழைக்கப்பட்டு உள்ளதால், அரக்கோணம் 🔄 சென்னை மூா் மாா்க்கெட் நிலையம் இடையே வாரத்தில், திங்கள் முதல் சனிக்கிழமை வரை, ஆறு நாட்கள் காலை, மாலை வேளைகளில், மேலும் ஒரு, சிறப்பு புறகா் மின்சார ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில், அரக்கோணத்தில் இருந்து, காலை 7:45 மணிக்கு புறப்பட்டு காலை, 9:45 மணிக்கு மூா் மாா்க்கெட் ரயில் நிலையம் வந்தடையும். மறுமார்கத்தில் மூா் மாா்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து, மாலை, 6:25 மணிக்கு புறப்பட்டு இரவு 8:25 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலையம் வந்து சேரும். இந்த ரயில்கள், இரு மாா்க்கங்களிலும், திருவள்ளூா் மற்றும் ஆவடி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.