தனியார் ரயில் சேவை - சாதகங்கள் குறித்து ரயில்வே துறை விளக்கம் ❗

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி வந்த பிறகு அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. 

சமீபத்தில் ரயில்வே துறை தனியார் வசமாக்கப்படும் என்ற செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்குப் பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். 
  • ரயில்வே துறையில் தனியார் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது மத்திய அரசு
  • முதற்கட்டமாக 151 ரயில்களை தனியார் துறை இயக்க உள்ளது
  • 109 வழித் தடங்களில் இந்த செயல்பாடு இருக்கும்

இந்த நிலையில், ரயில்வே வாரியத் தலைவர் வி.கே. யாதவ் இது குறித்து கூறுகையில், ‘ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதால் யாருக்கும் வேலைவாய்ப்பு பறிபோகாது. மாறாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், புதிய தொழில்நுடப்ஙகள் அமல்படுத்தப்படும். ரயில்வே துறையின் செலவை மீட்டெடுக்கும் வகையில், சில வழித்தடங்களில் மட்டுமே தற்போது தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. தற்போது வரை பயணிகள் ரயில் மூலம் வருவாய் இழப்புதான் ஏற்பட்டு வருகிறது. தனியார் மயமாக்கப்பட்டப் பிறகு மொத்தம் 151 ரயில் சேவைகள் தொடங்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் வருமானம் பெறலாம். 

நாட்டில் 2,800 மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் வெறும் 5 சதவீதத்தைத்தான் தனியார் வசம் ஒப்படைக்க உள்ளோம். மீதம் உள்ள 95 சதவீத சேவைகளை அரசுதான் இயக்கும். தற்போது தனியார் பங்களிப்பின் மூலம் ரயில்களின் இயக்கம் அதிகரிக்கப்படும். இதனால் ஏழை, எளிய மக்களுக்கு மேலும் ரயில் போக்குவரத்து அதிகரிக்கப்படும். 

தற்போது நாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் மூலம் அடுத்த 6 ஆண்டுகளில் காத்திருப்புப் பட்டியலில் யாரும் இருக்காத வண்ணம் செய்யப்படும். 

மேலும், இதற்கு முந்தைய நிதியாண்டுகளில் பயணிகள் காத்திருப்புப் பட்டியல் சுமார் 5 கோடிக்கும் அதிகமான பயணிகள் இருந்து வந்தனர். அடுத்த ஆண்டு முதல் புதிய தொழில்நுட்பம், வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதால், பயணிகள் காத்திருப்புப் பட்டியலில் இருப்போரின் எண்ணிக்கை குறைக்கப்படும். ரயில் கட்டணத்தைப் பொறுத்த வரையில், குறிப்பிட்ட வழித்தடங்களில் விமான சேவை, ஏசி பேருந்து சேவை ஆகியவற்றின் கட்டணத்தை ஒப்பிட்டு நிர்ணயிக்கப்படும்' எனக் கூறியுள்ளார்.

புதியது பழையவை