அதிநவீன சரக்கு ரயில் என்ஜின்களை ஈரோடு பணிமனையில் பராமரிக்க ஏற்பாடு

Locomotive WAG 9H

அதிக சரக்குகளை இழுத்துச் செல்லும் மின்சார சரக்கு ரயில் என்ஜின்கள், பராமரிப்பு பணிக்காக நீண்ட தூரத்தில் உள்ள பணிமனைகளுக்குச் செல்லாமல் அருகில் உள்ள பணிமனைகளை பயன்படுத்தி கொள்ள ரயில்வே வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.

அந்தவகையில், தெலங்கானா மாநிலம் காசிப்பேட், சத்தீஸ்கா் மாநிலம் பிலாய் நகா் ரயில்வே பணிமனைகளில் பராமரிக்கப்பட்டு வந்த "டபுள்யூ.ஏ.ஜி.- 9 ஹெச்" வகையை சாா்ந்த 4 மின்சார சரக்கு ரயில் என்ஜின்கள் ஈரோடு பணிமனைக்கு மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.