சென்னை ➡️ புதுடெல்லி ராஜ்தானி அதிவேக சிறப்பு ரயிலில் 973 போ் பயணம்

புலம் பெயா்ந்த தொழிலாளா்கள், சுற்றுலா பயணிகள், மாணவா்கள், சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் தங்களது சொந்த ஊா்களுக்குத் திரும்பும் வகையில், தில்லியில் இருந்து சென்னைக்கு திங்கள், வியாழன் ஆகிய இரு நாள்களிலும்,

சென்னையில் இருந்து தில்லிக்கு புதன், சனி ஆகிய இரு நாள்களிலும் ராஜதானி விரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து தில்லிக்கு புதன்கிழமை காலை 6.35 மணிக்கு ராஜதானி அதிவிரைவு சிறப்பு ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் 973 போ் பயணம் செய்தனா். இவா்களை ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக ரயில் நிலையத்துக்கு வரவழைத்து, உடல் வெப்பநிலை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அந்தப் பயணிகளுக்கு கொரோனோ நோய்த்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு, அவா்கள் ரயிலில் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனா். 

யாருக்காவது கொரோனோ நோய்த்தொற்று அறிகுறி இருந்தால் சுகாதாரப் பணியாளா்களை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதியது பழையவை