மாநிலத்திற்குள் இயக்கப்பட்டு வந்த 7 ஜோடி சிறப்பு ரயில்கள் ஜூலை 31ம் தேதி வரை ரத்து.

தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் தமிழகத்தில் மாநிலத்திற்குள் இயக்கப்படும் ரயில்களை (அட்டவணை இணைப்பு) 16.07.2020 வியாழக்கிழமை முதல் 31.07.2020 வெள்ளிக்கிழமை வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

1. 02605/06 திருச்சிராப்பள்ளி 🔄 செங்கல்பட்டு (வழி: விருத்தாச்சலம்) சிறப்பு அதிவேக விரைவு சிறப்பு ரயில்

2. 02635/36 மதுரை 🔄 விழுப்புரம் அதிவேக விரைவு சிறப்பு ரயில்

3. 02679/80 கோயம்புத்தூர் 🔄 காட்பாடி அதிவேக விரைவு சிறப்பு ரயில்

4. 06795/96 திருச்சிராப்பள்ளி 🔄 செங்கல்பட்டு (வழி: மயிலாடுதுறை) விரைவு சிறப்பு ரயில்

5. 02675 கோயம்புத்தூர் 🔄 அரக்கோணம் அதிவேக விரைவு சிறப்பு ரயில்

6. 02083/84 கோயம்புத்தூர் 🔄 மயிலாடுதுறை ஜனசதாப்தி சிறப்பு ரயில்

7. 02627/28 திருச்சிராப்பள்ளி 🔄 நாகர்கோவில் இன்டர்சிட்டி அதிவேக விரைவு சிறப்பு ரயில்

இந்த ரயில் சேவைகள் ஏற்கனவே 29.06.2020 முதல் 15.07.2020 வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது  31.07.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.