ரயில் பயணசீட்டுகளை ரத்து செய்ய எதுவாக மதுரை ரயில்வே கோட்டத்தில் மேலும் 7 இடங்களில் நாளை(ஜூலை 20) முதல் முன்பதிவு மையங்கள் செயல்படும்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு கட்டணத்தை திரும்ப அளிப்பதற்காக மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் முன்பதிவு மையங்கள் இயங்கிவருகின்றன. 

இந்நிலையில் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு கட்டணத்தை திரும்ப அளிப்பதற்கான ஏற்பாடுகளை தற்போது மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி நாளை (20.7.2020) முதல் தூத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய 7 ரயில் நிலையங்களில் உள்ள பயணச் சீட்டு முன்பதிவு மையங்களில் பயணசீட்டுகளை ரத்து செய்து கொள்ளலாம்.

ஏற்கனவே மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய 4 ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த முன்பதிவு மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
இடையில் மதியம் 2 மணி முதல் 2 30 மணி வரை உணவு இடைவேளை.

எனவே பொதுமக்கள் கொரோனா பொது முடக்கத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான பயணச்சீட்டுகளை ரத்துசெய்து முழு கட்டணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

முழு ஊரடங்கு காரணமாக ஜூலை 26ம்(ஞாயிற்றுக்கிழமை) தேதி முன்பதிவு மையம் செயல்படாது.

PRS CENTRES IN THE FOLLOWING LOCATIONS WILL FUNCTION FROM TOMORROW

The PRS (Passenger Reservation System) in the following locations will function from tomorrow (20.07.2020) onwards.

1. Tuticorin

2. Kovilpatti

3. Tenkasi

4. Punalur

5. Ramanathapuram

6. Sivagangai

7. Karaikudi

8. Pudukkottai

Working hours 09.00 to 17.00 hrs. Lunch break 14.00 to 14.30 hrs. Passengers can avail ticket refunds on the above centres.

On 26.07.2020 (Sunday) PRS counter will be closed, due to complete lockdown.