ரயில்வேயில் 50% பணியிடக் குறைப்பு தொடங்கியது ❗- தெற்கு ரயில்வேயில் சுமார் 3,500 பணியிடங்கள் குறையும் ❗

ரயில்வே துறையில் பாதுகாப்பு அல்லாத பணியிடங்களில் தற்போதுள்ள காலியிடங்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தும் பணி கோட்டவாரியாக நடைபெற்று வருகிறது. இதற்கான துறைரீதியிலான சுற்றறிக்கை  கோட்ட மேலாளர்கள், துறைத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையில் ஏற்பட்டுள்ளை வருவாய் இழப்பையடுத்து ஆள் குறைப்பை இந்திய ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது.

இவர்கள் அளிக்கும் பாதுகாப்பு இல்லாத காலிப் பணியிட பட்டியலில் 50% இடங்கள் குறைக்கப்பட உள்ளன. இந்த நடவடிக்கையால் தென்னக ரயில்வேயில் சுமார் 3,500 பணியிடங்கள் உட்பட, நாடு முழுவதும் 60,000 பணியிடங்கள்  குறைக்கப்பட உள்ளது.

Out of 7,211 sanctioned posts, 2,509 posts are lying vacant in the zonal office. Similarly, another 4,683 posts were lying vacant as on July 1, in the six divisions, workshops and other units.

With 7,192 posts lying vacant across Southern Railway, the threat is that at least 3,500 posts would be surrendered.