தமிழகத்தில் 219 கிலோமீட்டர் ரயில் பாதையை 2020-2021ம் ஆண்டில் மின்மயமாக்க இலக்கு நிர்ணயம்

ரயில்வே பாதைகளை மின்மயமாக்கல், ஆற்றலை சேமிக்கும் வகையில் ரயில் எஞ்சின்களையும், பெட்டிகளையும் மேம்படுத்துதல், ரயில் பெட்டிகளில் உயிரி – கழிவறைகளைப் பொருத்துதல், புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி வளங்களுக்கு மாறுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, கரிமில வாயுவை முற்றிலும் வெளியிடாமல் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வேத் துறை மேற்கொண்டு வருகிறது.

40,000 கி.மீ. தூரத்திற்கும் அதிகமான அளவில் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இதில் 18,605 கி.மீ. மின்மயமாக்கல் பணியானது 2014-20-ல் செய்து முடிக்கப்பட்டது. 2020-21 ஆம் ஆண்டில் 7,000 கி.மீ. தூரத்திற்கு ரயில் பாதைகளை மின்மயமாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து அகலப் பாதைகளையும் 2023 டிசம்பர் மாதத்திற்குள் மின்மயமாக்கும் பணியை நிறைவு செய்ய ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் 219 கிலோமீட்டர் ரயில் பாதையை 2020-2021ம் ஆண்டில் மின்மயமாக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது.

2021ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மின் தடம் அமைக்க பின்வருமாறு தடங்களில் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூர் - காரைக்கால் துறைமுகம்42

நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி9

கடலூர் துறைமுகம் - விருத்தாசலம்57

விருத்தாசலம் - குட்டகுடி33

மதுரை - மானாமதுரை45

விருதுநகர் - திருச்சுழி33


IR Electrification notched up from 2015-16 to 2019-20 in increasing trend and resulted in a sum of 16889 RKM by 31st March 2020 which is 345% increase against previous five years IR data (2010-11 to 2014-15 - 3793 RKM). During the year 2019-20 alone, 2606 RKM has been electrified by CORE. In addition, sections of 560 RKM were ready with complete work in March 2020 but could not be commissioned due to COVID-19 restrictions.

Courtesy - CORE