ரயில் பயணங்களை பாதுகாப்பானதாகவும், பயணிகளின் வசதியை மேம்படுத்தவும் ரயில்வே வாரியம் 20 புதுமைகளைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது

ரயில் பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்கவும் பயண வசதிகளை மேம்படுத்தவும் ரயில்வே தொழிலாளர்கள் சிறந்த யோசனைகளை தெரிவிக்க வசதியாக 2018 ஆம் ஆண்டு ரயில்வே வாரியம் ஒரு தனித்துவமான இணையதளத்தை தொடங்கியது. இதில் சுமார் 2,645 யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. அதிலிருந்து 20 யோசனைகளை தேர்ந்தெடுத்து அவற்றை ரயில்களில் செயல்படுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

இதன்படி, ரயில்கள் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பயணிகளை எச்சரிக்கும் வகையிலான மணி, மின்சாரம் இல்லாமல் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட வாட்டர் கூலர்கள் ஆகியவை ரயில்களில் பொருத்தப்படும். இந்த வாட்டர் கூலர்களை மேற்கு ரயில்வே தயாரித்துள்ளது. ரூ.1.25 லட்சம் மதிப்பிலான இந்த வாட்டர் கூலர்களுக்கு மின்சாரம் தேவைப்படாததால் மின்சாரம் சேமிக்கப்படும். 

மேலும், வடக்கு மத்திய ரயில்வே சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள CCTV கேமராக்கள் ரயில்களில் பொருத்தப்படும். ஏற்கெனவே இவை ஒரு சில சொகுசு ரயில்களில் பொருத்தப்பட்டுள்ளன.