ராமேஸ்வரம் 🔄 மதுரை தடத்தில் தண்டவாளம் உறுதி தன்மை குறித்து 2ம் கட்டமாக ரயில் சோதனை

கொரோனோ தொற்று காரணமாக மார்ச் 24ம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை, மதுரை, கன்னியாகுமரி, வெளிமாநிலத்திற்கு செல்லும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, தண்டவாளத்தின் உறுதி தன்மை குறித்து கடந்த ஜூன் 5ம் தேதி ராமேஸ்வரம் 🔄 மானாமதுரை இடையே அதிவேக ரயில் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் இரண்டும் கட்டமாக நேற்று காலை 11:30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து அதிவேக சோதனை ரயில் ஒன்று 3 பெட்டிகளுடன் புறப்பட்டு, 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் மதுரை சென்றது.

இந்த ஆய்வில் தண்டவாளத்தில் பலவீனம் ஏதும் இல்லை என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.