தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் உள்ள ஊரடங்கினால் இம்மாதம் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் முன்பதிவு மையங்கள் செயல்படாது.
அதன்படி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, அரியலுார், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால், நாகை, திருவாரூர், விருத்தாசலம், திருவண்ணாமலை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர் (கடலுார்), ஸ்ரீரங்கம் ஆகிய 15 ரயில் நிலையங்களில், காலை 10:00 முதல், மாலை 5:00 மணி வரை கட்டணத்தை திரும்பப் பெறலாம்.
ஜூலை 1 முதல், 15ம் தேதி வரையிலான பயணசீட்டிற்கு, 1ம் தேதியிலிருந்தும், ஜூலை 16 முதல், 31 வரையிலான பயணசீட்டிற்கு, ஜூலை 6ம் தேதி முதல் பணத்தை திரும்பப் பெறலாம்.
ஆகஸ்ட் 1 முதல் 12ம் தேதி வரையிலான பயணசீட்டுகளுக்கு, ஜூலை 16ம் தேதி முதல் கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.