சென்னை - கூடுர் இடையே 130 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க, 1.47 கோடி ரூபாய் செலவில், மின் தொடர்பு வசதிகள்

நாடு முழுதும், முக்கிய பாதைகளில், ரயில்களின் வேகத்தை அதிகரிக்க, பாதைகள், சிக்னல்கள், மின் தொடர்புகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை சென்ட்ரல் -- ஆந்திரா மாநிலம் கூடூர் இடையே, 137 கி.மீ., ரயில் பாதையில், தற்போது, 80 - 110 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இப்பாதையில், 130 கி.மீ., வேகம் வரை, ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரயில் பாதை மற்றும் சிக்னல் அமைப்புகள், பாலங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.

அதன்படி ஆள் இல்லா ரயில்வே கேட்டுகள் மூடப்பட்டு, தேவைக்கு ஏற்ப, சாலை மேம்பாலங்கள், சுரங்க பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 130 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கப்படும் போது, வேக அழுத்தத்தை மின் சாதனங்கள் தாங்கும் வகையிலும், உரிய மின் தொடர்பு தடங்களின்றி வழங்கப்படவும், 1.47 கோடி ரூபாய் செலவில், மின் பாதை தரம் உயர்த்தப்படுகிறது.

இந்த பணிகள் 6 மாத காலத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.