ரயிலில் குரங்கு கடத்தியோருக்கு ரூ.1 லட்சம் அபராதம் ❗

மாதிரி புகைப்படம்

மேற்கு வங்கம் மாநிலம், ஹவுராவில் இருந்து, செவ்வாய்க்கிழமை, சென்னை வந்த சரக்கு ரயிலில், இரண்டு குரங்கு மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்ட அரிய வகை பறவைகள், கடத்தி வரப்பட்டன.

அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், வேளச்சேரி, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவை, மதுரைக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. இதன் மதிப்பு, 5 லட்சம் ரூபாய்.

இது தொடர்பாக, நான்கு பேரை கைது செய்த வனத்துறையினர், அவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.