மதுரை ரயில்வே கோட்டத்திற்க்கு உட்பட 4 ரயில் நிலையங்களில் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பயண கட்டணம் திரும்ப பெறுவதற்கான தேதிகள் அறிவிப்பு

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 21ம் தேதி முதல் நாட்டில் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக மார்ச் 22ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில் நேற்று(ஜூன் 1) முதல் நாட்டில் 200 ரயில்களின் சேவை துவங்கப்பட்டுள்ளது. அதில் 8 ரயில்கள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் மார்ச் 22ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் பயண கட்டணத்தை திருப்பி பெற்றுக்கொள்வதற்கான தேதிகளை மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

பயணம் துவங்கும் தேதிகட்டணத்தை திரும்ப பெறும் தேதி
22.03.2020 to 31.03.2020ஜூன் 1ம் தேதி முதல்
01.04.2020 to 14.04.2020ஜூன் 6ம் தேதி முதல்
15.04.2020 to 30.04.2020ஜூன் 11ம் தேதி முதல்
01.05.2020 to 15.05.2020ஜூன் 16ம் தேதி முதல்
16.05.2020 to 31.05.2020ஜூன் 21ம் தேதி முதல்
01.06.2020 to 30.06.2020ஜூன் 26ம் தேதி முதல்

முன்பதிவு மையங்களில் சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணியாமல் சென்றால் அனுமதி மறுக்கப்படும். 

ஏற்கனவே பயண தேதியில் இருந்து 6 மாத காலத்திற்குள் ரயில் பயண சீட்டுகளை ரத்து செய்ய ரயில்வேத்துறை கால அவகாசம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை