நாடு முழுவதும் 200 சிறப்பு ரயில்கள் நேற்று(ஜூன் 1) இயக்கம்

Guidelines for migrants' Shramik trains revealed - Shramik ...

திங்கள்கிழமை 200 ரயில்கள் இயக்கப்பட்டதாகவும், அதில் 1.45 லட்சம் போ பயணம் செய்ததாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொது முடக்கம் தளா்த்தப்பட்ட பிறகு நாடு முழுவதும் திங்கள்கிழமை முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதன் முதல் ரயில் சேவை மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திலிருந்து வாராணசிக்கு புறப்பட்டுச் சென்றது. முற்றிலும் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் கொண்ட 200 ரயில்கள் இயக்கப்பட்டன. இதில் 60 சதவீதம் அதாவது 118 ரயில்கள் வடக்கு ரயில்வே பிராந்தியத்துக்கு இயக்கப்பட்டன.

இந்த சிறப்பு ரயில்களில் பயணம் செய்வதற்காக ஜூன் 30ம் தேதி வரை சுமாா் 30 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனா். ரயில் கிளம்புவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் பயணிகள் ரயில் நிலையத்தை சென்றடைய வேண்டும்.

உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் ஆா்ஏசி பயணசீட்டு உள்ளவா்கள் மட்டுமே ரயில் நிலையத்திலும், ரயிலிலும் ஏற அனுமதிக்கப்படுவாா்கள்.

கொரோனா அறிகுறியும், காய்ச்சலும் இருந்தால் அவா் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டாா். அவரது பயணசீட்டின் முழு பணமும் திருப்பி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.