சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட 19 ரயில் நிலையங்களில் நாளை(ஜூன் 5) முதல் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பணத்தை திரும்ப பெறலாம்.


ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களுக்கு முன்பதிவு மையங்கள் மூலம் பெற்ற பயணசீட்டுகளுக்கு பணத்தை திரும்பப் பெற நாளை முதல் சென்னை கோட்டத்திற்குட்பட்ட  19 முன்பதிவு மையங்கள் திறக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

கீழ்கண்ட ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் நாளை (ஜூன் 5) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், சென்னை கடற்கரை, திருமழிசை, மாம்பலம், செயின்ட் தாமஸ் மவுண்ட், தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, வாலாஜா ரோடு, ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை.


பயணம் துவங்கும் தேதிகட்டணத்தை திரும்ப பெறும் தேதி
22.03.2020 to 31.03.2020ஜூன் 5ம் தேதி முதல்
01.04.2020 to 14.04.2020ஜூன் 12ம் தேதி முதல்
15.04.2020 to 30.04.2020ஜூன் 19ம் தேதி முதல்
01.05.2020 to 15.05.2020ஜூன் 26ம் தேதி முதல்
16.05.2020 to 31.05.2020ஜூலை 7ம் தேதி முதல்
01.06.2020 to 30.06.2020ஜூலை 10ம் தேதி முதல்

முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மேலும் சமூக இடைவெளியையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
புதியது பழையவை