ஜூன் 12ம் தேதி முதல் மூன்று வழிதடங்களில் தினசரி சிறப்பு ரயில் : முன்பதிவு இன்று(ஜூன் 10) காலை 8மணி முதல் ஆரம்பம்.


தமிழகத்தில் தற்போது 4 வழித்தடத்தில் பகல் நேர சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. இந்த நிலையில் மேலும் 3 பகல் நேர சிறப்பு ரயில்கள் ஜூன் 12ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாகவும், அதற்கான முன்பதிவு இன்று(ஜூன் 10) முதல் நடைபெறவுள்ளது என்றும் தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் குறிப்புட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;


🚂 திருச்சி 🔄 செங்கல்பட்டு தினசரி சிறப்பு ரயில். 

திருச்சியில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும், 02606 திருச்சி ➡️ செங்கல்பட்டு சிறப்பு ரயில் காலை 11:30க்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்கத்தில் செங்கல்பட்டில் இருந்து மாலை 4:45க்கு புறப்படும் 02605 செங்கல்பட்டு ➡️ திருச்சி சிறப்பு ரயில் இரவு 9:05க்கு திருச்சி வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில் அரியலூர், விழுப்புரம் மற்றும் மேல்மருவத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான அட்டவணை பின்வருமாறு :


🚂⬇️⬇️⬇️🚂⬆️⬆️⬆️
7:00திருச்சி21.05
08.08/08.10அரியலூர்19.38/19.40
09.43/09.45விழுப்புரம்18.05/18.10
10.38/10.40மேல்மருவத்தூர்17.03/17.05
11:30செங்கல்பட்டு16.45

🚂 அரக்கோணம் 🔄 கோயம்புத்தூர் தினசரி சிறப்பு ரயில்.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் 02675 அரக்கோணம் ➡️ கோயம்புத்தூர் சிறப்பு ரயில் பிற்பகல் 2:05க்கு கோயம்புத்தூர் வந்து சேரும். மறுமார்கத்தில் மாலை 3:05க்கு கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் 02676 கோயம்புத்தூர் ➡️ அரக்கோணம் சிறப்பு ரயில் இரவு 10மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான அட்டவணை பின்வருமாறு ;


🚂⬇️⬇️⬇️🚂⬆️⬆️⬆️
7:00அரக்கோணம்22:00
07.50/08.05காட்பாடி20.35/20.50
09.23/09.25ஜோலார்பேட்டை19.23/19.25
11.07/11.10சேலம்17.43/17.46
12.07/12.10ஈரோடு16.47/16.50
12.53/12.55திருப்பூர்15.58/16.00
14.05கோயம்புத்தூர்15.15

🚂 செங்கல்பட்டு 🔄 திருச்சி தினசரி சிறப்பு ரயில்.

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும், 06795 செங்கல்பட்டு ➡️ திருச்சி சிறப்பு ரயில் இரவு 8மணிக்கு திருச்சி சென்றடையும். மறுமார்கத்தில் காலை 6:30க்கு திருச்சியில் இருந்து புறப்படும், 06796 திருச்சி ➡️ செங்கல்பட்டு சிறப்பு ரயில் பகல் 12:40க்கு செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில் மேல்மருவத்தூர், விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், மயிலாடுதுறை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

இந்த ரயிலுக்கான அட்டவணை பின்வருமாறு ; 

🚂⬇️⬇️⬇️🚂⬆️⬆️⬆️
14:00செங்கல்பட்டு12:40
14.28/14.30மேல்மருவத்தூர்11.46/11.48
15.50/15.55விழுப்புரம்10.45/10.50
16.40/16.42திருப்பாதிரிபுலியூர்09.43/09.45
18.00/18.02மயிலாடுதுறை08.20/08.22
18.33/18.35கும்பகோணம்07.48/07.50
19.08/19.10தஞ்சாவூர்07.13/07.15
20:10திருச்சி6:30

மேற்கொண்ட மூன்று சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று(ஜூன் 10) காலை 8மணி முதல் நடைபெறும்.
புதியது பழையவை