சென்னை யானை கவுனி பாலம் இடிக்கப்பட்டது ! : சென்னை சென்ட்ரல் வந்து செல்லும் ரயில்களின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு

Corporation to spend Rs 26.45 crore on new Elephant Gate bridge ...

பழமை வாய்ந்த யானைக்கவுனி பாலம் மிகவும் பழுதடைந்ததால், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகக் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் செல்வதற்கு ரயில்வே துறை மற்றும் போக்குவரத்துத் துறை தடை விதித்தது.

இந்த சூழ்நிலையில் யானைக்கவுனி பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கப்படும் என்று 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக அரசு அறிவித்தது. இதற்காக தெற்கு ரயில்வே சென்னை மாநகராட்சியுடன் இணைந்து 50 சதவிகித நிதி பங்களிப்புடன் ரூ. 43.77 கோடி செலவில் புதிய பாலம் அமைக்கப்பட இருக்கிறது.

புதிதாக 100 மீட்டர் நீட்டிக்கப்படவுள்ள பகுதியில் பாலம் அமைக்கும் பணி முற்றிலும் ரயில்வே துறை நிதி மூலமும் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்தப் பாலத்தின் கீழ் தண்டவாள பாதைகளைக் கூடுதலாக, 47 மீட்டரிலிருந்து 150 மீட்டருக்கு நீட்டிக்க தெற்கு ரயில்வே தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் கூடுதல் ரயில் தடம் அமைக்கவும், சென்னை சென்ட்ரல் வந்து செல்லும் ரயில்கள் சரியான நேரத்திற்கு வந்து செல்லவும் இது வழிவகுக்கிறது.

இந்நிலையில் பாலம் முழுவதுமாக இன்று இடிக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.வழக்கமான நாட்களில் இந்த பாலத்தை இடித்திருந்தால் ரயில் சேவையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். ஆனால் பொது முடக்கம் சமயத்தில் பாலம் இடிக்கப்பட்டதால் ரயில் சேவையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.

இதே போன்று ஈரோடு - சேலம் தடத்தில் எஸ்.பி.பி காலனியில் அமைத்துள்ள சுரங்க பாதையும் இந்த ஊரடங்கு சமயத்தில் மாற்றயமைக்கப்ட்டுள்ளது.

புதியது பழையவை