 |
Image Credits - ANI |
கடந்த மார்ச் 24 முதல் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் முக்கியமான நகரங்கள், தங்கள் பணியிடங்களிலிருந்து சொந்த ஊருக்குச் செல்ல முயன்றனர். சிலர் நடைபயணம், மிதிவண்டிகளில் சென்றனர்.
 |
Image Credits - ANI |
இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர். தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென சில மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
 |
Image Credits - ANI |
இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து இன்று இரவு பிஹாருக்கு ரயில் புறப்படுகிறது. இதில் செல்வதற்காக கேரளாவின் தெற்கு பகுதியில் இருந்து ஏராளமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர். அவர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் அனைவரும் சமூகவிலகலை கடைபிடித்து சோதனை செய்யப்பட்ட பிறகே ரயிலில் ஏறுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
 |
Image Credits - ANI |